உள்ளூர் செய்திகள்

உயிர் காக்கும் வீட்டினை கண்டுபிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2023-02-21 08:47 GMT   |   Update On 2023-02-21 08:47 GMT
  • வெள்ளப்பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் வீட்டினை கண்டுபிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தனர்.
  • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அதனை கலெக்டர் ஜெயசீலன் விசாலினியிடம் வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகரை சேர்ந்த நரேஷ்குமார் மற்றும் சித்ரகலா தம்பதியின் மகள் விஷாலினி ஐதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸில் படித்து வருகிறார்.

இவர் வெள்ளப் பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் பொருட்டு வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை கண்டுபிடித்துள்ளார்.

இந்த சாதனம் மனித உயிரை குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், செல்ல பிராணிகள், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை காப்பாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லெக்டர் அலுவலகத்தில் பிரதமர் "பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்" விருது மற்றும் ரூ.1லட்சம் பரிசுத்தொ கையாக காணொலி காட்சி மூலம் விசாலினிக்கு வழங்கினார்.

அதனை த்தொடர்ந்து மத்திய அரசின் மூலம் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதிற்கான பதக்கம், கைகடிகாரம், டேப் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் விருதிற்கான சான்றிதழ் மத்திய அரசின் மூலம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப ப்பட்டு அதனை கலெக்டர் ஜெயசீலன் விசாலினியிடம் வழங்கினார்.

Tags:    

Similar News