உள்ளூர் செய்திகள்

நுண் உர செயலாக்க மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றும் பணியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்

Published On 2023-03-23 08:44 GMT   |   Update On 2023-03-23 08:44 GMT
  • விருதுநகர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
  • நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விருதுநகர்

விருதுநகர் நகராட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் நகராட்சி, வி.எம்.சி. காலனியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடத்தையும், புல்லலக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2.0 மூலம் ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் வகையில் ரூ.43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருள் மீட்டு வசதி கட்டிடத்தையும், விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் மின் மயானத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் மணி, உதவி பொறியாளர் பாலாஜி மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News