பயனாளிகள்உறுதிமொழி சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்
- பயனாளிகள் 30-ந் தேதிக்குள் உறுதிமொழி சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- ஏப்ரல் 2022 மாதம் முதல் சமர்ப்பித்தவர்கள் வரதேவையில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் 2022-23-ம் ஆண்டுக்கான உயிர்சான்றினை (LIFE CERTIFICATE) அந்தந்த பகுதிகளில் வசித்து வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய கிராம நிர்வாக அலுவலர்களிடம் உயிருடன் உள்ளார் என்பதற்கான உறுதி மொழிச்சான்றினை பெற்று வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே ஏப்ரல் 2022 மாதம் முதல் சமர்ப்பித்தவர்கள் வரதேவையில்லை.மேலும் மாற்றுத்திறனாளிகள் இறந்திருந்தாலோ அல்லது வேறு முகவரியிலோ அல்லது வேறுமாவட்டத்திற்கோ குடிபெயர்ந்து இதுவரை தகவல் தெரிவிக்காதவர்கள் அதன் விவரத்தினை தெரிவிக்கும்படியும், மேலும் உயிர்சான்றினை சமர்ப்பிக்கும் போது அதனுடன் தனித்துவ அடையாள அட்டை(UDID), வங்கிக் கணக்கு புத்தக நகல்,ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.