உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் திருடிய மர்ம நபர்

Published On 2022-07-16 08:52 GMT   |   Update On 2022-07-16 08:52 GMT
  • சாத்தூரில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் திருடினார்.
  • இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர் அருகே உள்ள வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது 49). இவர் சம்பவத்தன்று அருகிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார்.

அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணத்தை எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். இதற்காக பாலசுப்ரமணியம் தனது ரகசிய எண்ணையும் அந்த வாலிபரிடம் தெரிவித்துள்ளார்.அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல் பாசாங்கு செய்து உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி பாலசுப்பிரமணியத்திடம் வேறோரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுந் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னிடம் இந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது அவருடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுப்ர மணியம் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை வரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News