பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தல்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு சிறப்பொழிவு நடந்தது.
இளநிலை வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவரும், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் தலைவருமான கைலாஷ் ராஜ் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகராட்சியின் தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் சூர்யாகுமார் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடு, சுற்றுசுழல் மாசுபாடு. கடல்வாழ் மற்றும் நிலவாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றியும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் மனித உடலில் ஏற்படும் புதிய நோய்கள் பற்றியும் எடுத்து ரைத்தார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.
வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.