உள்ளூர் செய்திகள்

அன்னப்பராஜா பள்ளிக்கு மேம்பாட்டு வசதிகள் வழங்கும் விழா

Published On 2023-01-09 13:56 IST   |   Update On 2023-01-09 13:56:00 IST
  • அன்னப்பராஜா பள்ளிக்கு மேம்பாட்டு வசதிகள் வழங்கும் விழா நடந்தது.
  • விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமார், வியாஷ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் ரூ.50 லட்சத்தில் இசைக்கருவிகள், உடற்பயிற்சிக் கருவிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, இண்ட்ராக்ட் டச் பேனல்கள், டேபிள் டென்னிஸ் போர்டு, மாணவியர் ஓய்வறைத் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினர்.

அவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. ரோட்டரி அமைப்பின் தலைவர் குமார் ராஜா வரவேற்றார். பள்ளிச்செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ராஜவேல், பாஸ்கரன், விசுவநாதன், முன்னாள் மாவட்ட பொது செயலர் மாரிமுத்து, முருகதாஸ், ராமசுப்பிரமணிய ராஜா, வள்ளிநாயகம் என்ற கார்த்திக், ஆறுமுகச்செல்வன், தினேஷ்பாபு ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி அமைப்பின் தென்மண்டல ஆளுநர் வி.ஆர்.முத்து பங்கேற்று "பெண்களே நாட்டின் கண்கள், கல்வியும் கடின உழைப்பும் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்" என்று பேசினார். தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமார், வியாஷ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News