- மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வந்த போது விபத்தில் வாலிபர் பலியானார்.
- ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தேவிப்பட்டினம் கீழமேட்டு தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 24). இவரது மனைவி கவி கவுசல்யா (22). நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கவி கவுசல்யா ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.
அவரை கணவர் பாண்டி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, மனைவிக்கு தேவையான துணிகளை எடுத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் உள்ள தாய்சேய் நல விடுதி முன்பு சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த பாண்டி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.