உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் சென்னை ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவரும்,சங்க தலைவருமான டாக்டர் கனகராஜூக்கு விருதுநகர் மாவட்ட தலைவர் ராமராஜ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம்

Published On 2023-01-30 05:28 GMT   |   Update On 2023-01-30 05:37 GMT
  • ராஜபாளையத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
  • இந்த கூட்டத்தில் ஜெயா கல்வி குழுமங்களின் சேர்மன் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார்.

ராஜபாளையம்

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடந்தது.

விருதுநகர் மாலட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணபெருமாள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலை வரும், சென்னை ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவருமான டாக்டர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி கற்றுத் தரும் விதத்தை 2 ரகமாக பிரித்து பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம். சுதந்தி ரத்திற்கு முன்பு, பின்னர் என்று எடுத்துக் கொள்ளலாம். கடும் எதிர்ப்புகளையும் தாண்டித்தான் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. வாயிலாக தரமான ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்க முடிந்தது. அதன் பலனாகத் தான் தமிழ்நாட்டுக்கு பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வெளிக் கொண்டு வரமுடிந்தது.

கல்விக் கண் திறந்த காமராஜர் அவதரித்த புண்ணியபூமி என்பதால் விருதுநகர் மாவட்டம் அரசு தேர்வில் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. அரசு பள்ளிகளில் பல சலுகைகள் வழங்கப்பட்டாலும் நாம் என்றும் தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்க ளாகவும், ஒழுக்கத்தையும் வாழ்க்கையில் மேன்மையுற கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களை கற்றுதரும் சிறந்த கல்வி நிறுவனங்களாகவும் திகழவேண்டும்.

தரம், நிரந்தரம் ஆக்கப்படும் போது தான் குழந்தைகளை பெரிய, பெரிய அதிகாரிகளாக வளர்க்க முற்படும் பெற்றோர்கள் நமது கல்வி நிலையங்களை தேடி வருவார்கள். அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விருதுநகர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

பள்ளி கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கக்கூடாது, விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளிகளுக்குதொடர் அங்கீகாரசான்று வழங்க வேணடும், ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும், அனைவருக்கும் ஒரே மாதிரியான, நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுசெயலாளர் நந்தகுமார், சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளி நிர்வாகி சுரஜ்குமார் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் கந்தையா நன்றி கூறினார்.

இதற்கான எற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News