உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

Published On 2023-07-13 07:12 GMT   |   Update On 2023-07-13 07:12 GMT
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னகொல்லபட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் 587 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 309 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவ ழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. எனவே, 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று கால் நடைத்துறை, மருத்து வத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்டங்கள் பொது மக்களுக்காக செயல்படுத் தப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தனித்துறை கலெக்டர் அனிதா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், சாத்தூர் ஊராட்சி ஒன்றிக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News