சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் மீது வழக்கு
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
- போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தப்பா, பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். 10-ம் வகுப்பு தேர்வு சமயத்தில் சித்தப்பா இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாட்டி மற்றும் உறவினரிடம் சிறுமி கூறி உள்ளார். இதையடுத்து சிறுமிக்கு பாதுகாப்பு வேண்டும் என கருதி அவர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் பாட்டியும், உறவினரும், மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டினர். இது குறித்து பள்ளி தலைமையாசிரி யரிடம் சிறுமி தெரிவித்தார். உடனடி யாக குழந்தைகள் நலத்துறையின் கவனத்திற்கு தலைமையாசிரியர் கொண்டு சென்றார். இதை யடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்து சிறுமியை ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை தேடி வருகின்றனர்.