பலியான குழந்தை
தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை பலி
- ராஜபாளையத்தில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை பலியானது.
- ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன்-மாரீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் பரமேசுவரன் என்ற ஆண் குழந்தையும், 1½ வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று மாலை மாரீஸ்வரி துணி துவைத்து மொட்டை மாடியில் காய போட சென்றார். அப்போது வீட்டின் கீழே விளையாடிக் கொண்டிருந்த 1 ½ வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டிப் பார்த்தாள்.
இதில் குழந்தை எதிர்பாராத விதமாக பக்கெட்டில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. துணியை காயப்போட்டுவிட்டு கீழே இறங்கி வந்த மாரீஸ்வரி குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்ததை கண்டு அலறி துடித்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது அந் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.