உள்ளூர் செய்திகள்

கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சின்னமனூரில் மாசில்லா பசுைம வழி விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2023-09-19 04:30 GMT   |   Update On 2023-09-19 04:30 GMT
  • பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சின்னமனூர்:

சின்னமனூரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, சென்னை தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை தேசிய பசுமை படை மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டம் சார்பில் மாசில்லா பசுைம வழி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை கொண்டு சிலைகளை வடிவமைத்தல், பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை சித்ரா தொடங்கி வைத்தார். பசுமை படை ஒருங்கிணை ப்பாளர் வெங்கடேசன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News