உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது.அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உச்சிஷ்ட கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-09-09 14:52 IST   |   Update On 2023-09-09 14:52:00 IST
  • உச்சிஷ்ட கணபதி 4 கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.
  • திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரம் என்னும் பகுதியில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோவில் அமைந்துள்ளது.

ராஜ கோபுரத்துடன் 8 நிலை மண்டபங்கள், 3 பிரகாரங்கள், கொடி மரத்துடன், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விநாயகருக்கான தனித் கோவில் இதுவாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி 4 கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என்பதை பறைசாற்றுகிறது.

சித்திரை மாதத்தின் முதல் 3 நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் விநாயகா் சதுா்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம் போன்றவை கள் நடைபெற்றன.

திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை சாந்திகள் நடைபெற்று யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது. தொடா்நது கொடிப்பட்டம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 8 மணிக்குள் கொடியேற்றம் நடை பெற்றது. பின்னா் கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

10 தினங்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறு கின்றது. மாலையில் விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது. வருகிற 16-ந்தேதி 8-ம் திருநாளில் மூலவருக்கு 1008 தேங்காய் அலங்காரமும், மாலையில் பச்சை சாத்தி திருவீதி உலாவும் நடைபெறும்.

வருகிற 18-ந் தேதி ஸ்ரீ விநாயகா் சதுா்த்தி விழாவும், தாமிரபரணி நதிக்கரையில் தீா்த்தவாாியுடன் திருவிழா நிறைவடைகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News