உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு-தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின

Published On 2022-07-18 09:28 GMT   |   Update On 2022-07-18 09:28 GMT
  • விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
  • தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் மாணவி மர்மமாக இறந்தது குறித்து போராட்டக்காரர்களால் பள்ளி சூறையாடப்பட்டது. இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் தமிழக அரசு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கூறுகையில் தனியார் பள்ளிகள் எந்தவித அறிவிப்பும் இன்றி விடுமுறை தெரிவித்தால் அந்த பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி சி.பி.எஸ்.இ., ஆங்கில இந்தியன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்க கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளாக 89 மெட்ரிகுலேஷன் பள்ளி 3 சிறப்பு பள்ளி 26 சி.பி.எஸ்.இ. பள்ளி 19 சுயநிதி பள்ளி மற்றும் 17 நகராட்சி பள்ளி, 64 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 1 பழங்குடியினர், அரசு நிதி உதவி பெறும் பள்ளி 197, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 140 உள்ளிட்ட 1806 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News