உள்ளூர் செய்திகள்

மயானத்தை அபகரித்து கொண்டதாக பாடை கட்டி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க பாடை கட்டி வந்த கிராம மக்கள்

Published On 2023-07-17 15:21 IST   |   Update On 2023-07-17 15:21:00 IST
  • யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளி லேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என தனி நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
  • சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்த பட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தோக்கம்பட்டி கிராமத்தில் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்தினை அதே ஊரை சேர்ந்த ஒருவர் அபகரித்து கொண்டதாக புகார் கொடுக்க வந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊருக்கே பொதுவான சுடுகாட்டு நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா? என தனி நபரிடம் முறையிட்ட போது யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளி லேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.

சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்த பட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்தே வேறு வழியின்றி இன்று பாடை கட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர்.

இதைத்தொடர்ந்து மனு கொடுக்க வந்த கிராம மக்கள் கூறுகையில்,

தங்களது மனு மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு கொடுத்த ஆவணங்களான ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைக்க போவதாகவும் வேதனை யுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News