உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2024-12-09 12:10 IST   |   Update On 2024-12-09 12:10:00 IST
  • மேல்மலையனூரில் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
  • போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செஞ்சி:

கடந்த வாரம் பெய்த புயல் மழையால் செஞ்சி பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களில் வெள்ள நிவாரண பணம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் பக்கத்து ஒன்றியமான மேல்மலையனூர் ஒன்றியத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு மேல்மலையனூர் ஒன்றியம் சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சத்திய மங்கலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சென்ற சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News