உள்ளூர் செய்திகள்

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை

Published On 2023-10-24 09:04 GMT   |   Update On 2023-10-24 09:04 GMT
  • விஜயதசமியை முன்னிட்டு வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
  • வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது குழந்தைகளை நெல்மணி யில் 'அ'கரம் எழுத வைத்து குழந்தைகள் தங்கள் கற்றல் திறனில் முதல் படியை வி.எஸ்.ஆர். பள்ளியில் எடுத்து வைத்தனர். இதனை புகைப்படம் எடுத்து பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், அதிக மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு 2023-24 - ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் பிரி.கே.ஜி.யில் மற்றொரு பிரிவு தொடங்கப் பட்டுள்ளது என்றும் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.

சரஸ்வதி பூஜை விஜயதசமி விழா

வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் முன்னிலை வகித்தார். இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளியின் முதல்வர் அன்னத்தங்கம் மற்றும் ஆசிரிய -ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜை அன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட மாண வர்களின் விரலை பிடித்து நெல்மணியில் எழுத ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர்.

மாணவர்கள் ஆர்வமு டன் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுக்கப்பட்டது. இன்றும் சிறப்பு மாணவர் சேர்க்கை பிரி.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை நடை பெறுகிறது. 

Tags:    

Similar News