மாலத்தீவு தீ விபத்தில் கன்னியாகுமரி தம்பதி பலி- குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் வசந்த் எம்.பி.
- மாலத்தீவில் மரணம் அடைந்த கணவன் மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை
- அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் ஆவன செய்வதாக விஜய் வசந்த் எம்.பி. உறுதியளித்தார்.
கன்னியாகுமரி:
மாலத்தீவில் நடந்த தீ விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் ஜெனிஸ்-சுந்தரி ஆகியோர் மரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களை கன்னியாகுமரி கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களது உறவினர்கள், மற்றும் ஊரார்கள், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்தை தொடர்பு கொண்டு மாலத்தீவில் மரணம் அடைந்த கணவன் மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், மாலத்தீவில் மரணம் அடைந்த தம்பதியர் ஜெனிஸ்-சுந்தரி ஆகியோரின் இல்லத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. சென்று, அவரது தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளுக்கும் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்ன குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், வட்டார காங்கிரஸ் தலைவர் என்.ஏ.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.