உள்ளூர் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா வாழ்த்தரங்கம்- விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்துரை

Published On 2023-07-31 16:40 IST   |   Update On 2023-07-31 16:40:00 IST
  • கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வாழ்த்தி பேசினார்.
  • சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார்.

நாகர்கோவில் புன்னைநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் டேவிட்சன் தலைமை வகித்தார். திமுக மாநில மாநில மகளீரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரையாற்றினார். முன்னாள் வட்ட செயலாளர் ஜெரின் சிங், கவுன்சிலர் சோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மண்டபம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, கலைஞர் கருணாநிதியுடனான நினைவுகளை கூறி புகழாரம் சூட்டி பேசினார். நிறைவாக மூத்த கழக நிர்வாகிகளுக்கு சால்வை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், முன்னாள் எம்.பி. எம்.சி.பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், லீமாரோஸ், நூர்முகமது, புஷ்பலீலா ஆல்பன், ரெஜினால்டு, காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News