உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமடைந்த பஸ்.

விழுப்புரம் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்

Published On 2022-08-18 07:45 GMT   |   Update On 2022-08-18 07:45 GMT
  • சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தது.
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்: 

சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சென்னை ரெட்ஹில்ஸ் அண்ணா தெருவை சேர்ந்த ராபின்சிங் (வயது 53), என்பவர் ஓட்டி சென்றார். அந்த பஸ் விழுப்புரம் அருகே கன்னிகாபு ரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது டிரைவர் பிரேக் பிடித்தார். இதில் டிரைவரின் கட்டுப்பா ட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (57), தூத்துக்குடி சோலை தெற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மார்த்தாண்டம் தேங்காய் பட்டினம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(44), கன்னியாகுமரி மாவட்டம் கொல்லி மலை மாதவரம் பகுதி சேர்ந்த ராஜேந்திரன் (45) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார் காயமடைந்த வர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News