பரமத்திவேலூரில் விடிய, விடிய கொட்டிய கனமழை
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் ,பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர் ,மணியனூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிபாளையம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, சிறுநல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், திரும்மல், கொத்தமங்கலம், வடகரையாத்தூர், கபிலர்மலை, கோப்பணம் பாளையம், இருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது.
அதனை தொடர்ந்து கனமழை பெய்ய ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது.
தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் பெய்த மழையால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையின் காரணமாக கிராமப்புறங்களில் பயிரிட்டுள்ள பல்வேறு பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.
வற்றிய கிணறுகளிலும் தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. இரவில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.