உள்ளூர் செய்திகள்

ராஜ கோபாலசுவாமி கோவிலில் வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெறவேண்டி பாளை கோவிலில் வித்யா சரஸ்வதி ஹோமம்

Published On 2023-03-12 14:46 IST   |   Update On 2023-03-12 14:47:00 IST
  • இன்று கோவில் நடை திறக்கப்பட்டு காலையில் பூஜைகள் நடைபெற்றது.
  • அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்பட்டது.

நெல்லை:

பாளையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேத நாராயணா் ஸ்ரீஅழகிய மன்னாா் ஸ்ரீராஜ கோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் கல்விக்கு அதிபதியான ஸ்ரீவேத நாராயணா் அருளினால் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-வது வகுப்பு மாணவ- மாணவிகள் பொதுத்தோ்வில் ஞாபகசக்தி அதிகாித்து அதிக மதிப்பெண் பெற்றிட வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் இன்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலையில் பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து கோவில் வெளி மண்டபத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தாா். பெருமாள் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடர்ந்து அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்பட்டது. பின்னர் வெண்தாமரை, வெண்கடுகு, வெல்லம், நெல்லிக்கனி,பாயாசம் மற்றும் ஹோம திரவியங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். யாக பூஜையில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பேனா மற்றும் சிறப்பு பிராத்தனை செய்த நெல்லிக்கனி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News