உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் விடிய, விடிய மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-10-30 08:57 GMT   |   Update On 2023-10-30 08:57 GMT
  • திருச்செந்தூர்,பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
  • செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

திருச்செந்தூர்:

வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஆலந்தலை, கல்லாமொழி, காயாமொழி, தளவாய்புரம், குமாரபுரம், இராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம், நடு நாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் பெய்த மழையால் பகத்சிங் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் டி.பி ரோட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. அவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News