- 10-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வேலூரில் வருகிற 10-ந் தேதி இளையோர் திருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி இளம் கலைஞர் ஓவியம், இளம் எழுத்தாளர் (கவிதை), புகைப்படம், பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளும், இளையோர் கலைவிழா, மாவட்ட இளையோர் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ், பரிசு, மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது முதல் 29 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து காட்பாடி வி.ஐ.டி. மெயின் கேட் எதிரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்திலோ அல்லது dycnyk.vellore@gmail.com என்ற மின்னஞ்சலிலோ வருகிற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.