உள்ளூர் செய்திகள்

மது பாட்டில் குத்தி பெண் கால் நரம்பு துண்டிப்பு

Published On 2023-04-21 09:49 GMT   |   Update On 2023-04-21 09:49 GMT
  • 100 நாள் வேலை திட்டத்தின் போது விபரீதம்
  • உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை

அணைக்கட்டு:

தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதேபோல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை செய்து வருகின்றனர்.

இதில் வழக்கம் போல் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ராதிகா (வயது 29)என்பவர் வேலை செய்து கொண்டு இருந்தார். வேலை செய்யும் இடத்தில் யாரோ மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து அப்பகுதியில் வீசி சென்றுள்ளனர். இதனை கவனிக்காத ராதிகா அதை மிதித்துள்ளார்.

இதனால் அவர் காலில் பாட்டிலின் கண்ணாடி ஆழமாக குத்தி நரம்பை அறுத்து உள்ளது.

இதனால் வலியால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த ராதிகாவை சக பணியாளர்கள் மீட்டு வேலூர் தனியார் மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அனுமதித்துள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும், அவரின் வாழ்வாதாரமே இழந்து தவிக்கும் வேளையில் அதிகாரிகள் இதனை அலட்சியம் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News