உள்ளூர் செய்திகள்

பெண் மோப்பநாய் `சாரா' வருகை

Published On 2023-06-03 14:40 IST   |   Update On 2023-06-03 14:40:00 IST
  • 6 மாதங்களாக நவீன பயிற்சி அளிக்கப்பட்டது
  • குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஈடுபடுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

வேலூர்:

வேலூர் மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்ற, மோப்ப நாய் பிரிவுக்கு புதியதாக `சாரா' என்னும் பெண் மோப்ப நாய் கடந்த ஆண்டு வாங்கப்பட்டது.

மோப்ப நாய்

குற்றங்களை கண்டறி வதற்காக வேலூரில் ஆறு மாதகால அடிப்படை பயிற்சி முடித்தது. இதனை தொடர்ந்து சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் பிரிவு தலைமையகத்தில் மேலும் 6 மாதங்கள் சாராவுக்கு நவீனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை முடித்து வேலூருக்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் `சாரா' மற்றும் நவீன பயிற்சி பெற்றதற்கான சான்று அறிக்கையை, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் பயிற்சியாளர்கள் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து `சாரா' மோப்பநாய் பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க `சாரா' மோப்பநாயை ஈடுபடுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News