உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு அருகே உள்ள மூலை கேட் பகுதியில் மேடை அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ ஆய்வு செய்த காட்சி.

வருகிற 13-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் வேலூர் வருகை

Published On 2022-07-06 15:37 IST   |   Update On 2022-07-06 15:37:00 IST
  • மேடை அமைப்பது குறித்து ஆலோசனை நடந்தது
  • அணைக்கட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு அருகே உள்ள மூலை கேட் பகுதியில் நடைபெற உள்ளது.இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்க ப்பட உள்ளது.இந்த இடத்தை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ பி நந்தகுமார் எம்எல்ஏ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது மேடை அமைப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் கோ.குமாரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News