உள்ளூர் செய்திகள்

வீடியோ காலில் நிர்வாணமாக வந்து வாலிபர் தொல்லை

Published On 2023-08-02 14:54 IST   |   Update On 2023-08-02 14:54:00 IST
  • இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
  • 50 முறைக்கு மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார்

வேலூர்:

வேலூர் எஸ் பி அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது வேலூர் அடுத்த காட்பாடி பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் மனு அளித்தார்.

மனுவில் அவர் கூறி இருப்பதாவது, நானும் எனது கணவரும் பீடி வேலை செய்து வருகிறோம். கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது செல்போன் வீடியோ காலில் வந்தார்.

அப்போது அவர் உடை இல்லாமல் நிர்வாணமாக தோன்றினார். மேலும் எனது உடல் உறுப்புகள் எப்படி உள்ளது என ஆபாசமான வார்த்தைகளை பேசினார்.

ஒரு நாளைக்கு 50 முறைக்கு மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார்.

எனவே வீடியோ காலில் நிர்வாணமாக வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

நந்தினி என்ற பெண் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் சீவூரை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது எனது பெற்றோர் நகை பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் நகைகளை விற்று விட்டனர்.

பின்னர் எனது மாமியார் சியாமளா நாத்தனார் யுவஸ்ரீ உட்பட குடும்பத்தினர் அனைவரும் கூடுதலாக வரதட்சணை வாங்கி வர வேண்டும் என எண்ணை அடித்து கொடுமைப்படுத்தி துன்புறுத்தினார்.

மேலும் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது. கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தும் கணவர் உட்பட அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News