உள்ளூர் செய்திகள்

வரி வசூலில் காட்டும் வேகத்தை அடிப்படை வசதிகள் செய்வதிலும் காட்ட வேண்டும்

Published On 2023-02-13 10:05 GMT   |   Update On 2023-02-13 10:05 GMT
  • வேலூர் மாநகராட்சி மீது பரபரப்பு புகார்
  • கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் மனு

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.வேலூர் மாநகராட்சி 32 -வது வார்டு கொணவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது;

கொணவட்டம் விரிவு பகுதியான இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு சாலைகள் கழிவுநீர் கால்வாய் சீரான குடிநீர் வசதி போதுமான மின்விளக்கு வசதி குப்பை தொட்டிகள் சுகாதார பராமரிப்பு வசதிகள் இல்லை.

இது பற்றி பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

வேலூர் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலில் காட்டும் வேகத்தை அடிப்படை வசதிகள் செய்வதிலும் அக்கறை காட்ட வேண்டும்.

இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேலூர் மாநகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News