பா.ம.க. வினர் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
பா.ம.க.வினர் கடிதம் அனுப்பும் போராட்டம்
- 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அனுப்பினர்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் கடிதம் அனுப்பினர்.
மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. பின், அந்த தடை விலக்கப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வேலூர் கருகம்புத்தூரி இன்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
கிழக்கு மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த போராட்டத்தில் பா.ம.க.வினர் பொதுமக்களுடன் ஊர்வலமாக சென்று அங்குள்ள தபால் நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர் பாரதிதாசன் ஆகியோருக்கு இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சுமார் 2 ஆயிரம் கடிதங்கள் அனுப்பினர்.
இந்தப் போராட்டத்திற்கு வேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜலகண்டேஸ்வரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் என்.டி. சண்முகம், மாவட்டச் செயலாளர் கே.எல்.இளவழகன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர் பி.கே. வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் ஆர். பி. சம்பத், துணைச் செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பயன்கள் மற்றும் உரிமைகள் தொடர்பாக பேசினர்.
இதில் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் சதீஷ், ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.