உள்ளூர் செய்திகள்

தியேட்டர்களில் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், வருவாய் துறையினர் திடீர் சோதனை நடத்திய காட்சி.

வாரிசு, துணிவு வெளியான தியேட்டர்களில் உதவி கலெக்டர் திடீர் சோதனை

Published On 2023-01-14 15:37 IST   |   Update On 2023-01-14 15:37:00 IST
  • குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு
  • ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள தியேட்டர்களில் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான நடிகர்விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் ஓடும் திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனார்.

கலெக்டரின் உத்தரவைத் தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்ட திரையரங்கங்களில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர்.

மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதா என ஆய்வு செய்தனர் தொடர்ந்து தியேட்டர்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா, சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென தியேட்டர்களில் ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News