உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள், ஊழியர்கள் தமிழிலேயே கையெழுத்து போட வேண்டும்

Published On 2023-07-27 14:42 IST   |   Update On 2023-07-27 14:42:00 IST
  • பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
  • அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது

வேலூர்:

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை தந்தை, தாய், ஊர் பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என்று ஆணை வெளியி டப்பட்டது.

ஆனால் அரசு அலுவலர்கள் கூட முன்னெழுத்தை முழுமையாக தமிழில் எழுதுவதில்லை என்றும், எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பினை செயற்ப டுத்தும் வகையிலும் உயர் அலுவலர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் பெயர்களை எழுதும்போதும், கையொப்பமிடும்போதும் தமிழிலேயே எழுதப்பட்ட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பாவது:-

அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க் கப்படுகிறது. அதில் தெரி வித்துள்ளவாறு, அரசு அலுவலகங்களில் பணிபு ரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறை களின்படி தங்களின் பெயர்களை எழுதும்போது கையொப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே எழுத வேண்டும். இவ்லாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News