காட்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விதைகள், உரம்
- விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது
- வேளாண் அதிகாரிகள் தகவல்
வேலூர்:
காட்பாடி யூனியனில் 41 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில், பெரும்பாலானவை விவசாய நிலங்களை சார்ந்த கிராமங்களாகும்.
இதனால், காட்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் விதைகள், உரம் வகைகள், விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு சாகுபடிக்குதேவையான நெல் (கோ-51), ஆர்என்ஆர், உளுந்து, துவரை, கேழ்வரகு உள்ளிட்ட விதைகள் வந்துள்ளதாகவும், விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு நகலை அலுவலகத்தில் கொடுத்துவிதைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காக்கவும், அதிக மகசூல் தரக்கூடிய நுண்ணூட்டசத்து, திரவ உயிர் உரங்கள் ஆகியவையும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
தேவையானவர்கள் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் காட்பாடி யூனியனில் மணிலா 2,500 ஹெக்டேர், நெல் 750 ஹெக்டேர், கரும்பு 350 ஹெக்டேர், காய்கறி வகைகள் 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வேளாண் துறை தெரிவித்தனர்.