உள்ளூர் செய்திகள்

தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2023-08-09 15:40 IST   |   Update On 2023-08-09 15:40:00 IST
  • 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது
  • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவற்றி செல்கின்றனர். மேலும் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதே போல் நேற்றும் தேய்பிறை முன்னிட்டு யாகசாலைகள்.

அமைக்கப்பட்டு 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டு இருக்கும் வினாயகர்க்கு பூஜைகள் செய்யப்பட்டனர்.

பின்பு புனித கலச நீர் கொண்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செலயாளலர் செங்கடேசன் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News