உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் பெரிய நந்திக்கு சிறப்பு பூஜை

Published On 2023-05-22 16:16 IST   |   Update On 2023-05-22 16:18:00 IST
  • அமிர்த மிருத்திஞ்ஜேஸ்வரர் பூஜை நடந்தது
  • சீனந்தல் மடாலயத்தில் நடைபெற்றது

வேலூர்:

அகில பாரதீய விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சாரிய குரு சுவாமிகள் ஆதீனம் ஸ்ரீநந்தல் மடாலயத்தில் அமிர்த மிருத்திஞ்ஜேஸ்வரர் பூஜையும், சீனந்தல் மடாலயத்தின் 7-வது பீடாதிபதியும் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகளின் 1264-ம் ஆண்டு குரு பூஜை விழாவும் கலசபாக்கம் வட்டம் காந்தப்பாளையத்தில் அமைந்துள்ள சீனந்தல் மடாலயத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றன.

விஸ்வகர்ம ஜெகத்குரு 65-வது மடாதிபதி சிவ.சிவராஜ ஞானாச்சர்ய குரு சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. வேதபாட சாலையின் முதல்வர் சிவ.சிவஞானசேகரன் முன்னிலை வகித்தார்.

குருபூஜா விழாக்குழுவின் தலைவர் ஜி.விஸ்வநாதன் செய்தித் தொடர்பாளர் செ.நா.ஜனார்த்தனன், அபிஷேக உபயதாரர்கள் பங்கேற்றனர். 

Tags:    

Similar News