ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தல்
- 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் கஞ்சா ஆபரேஷன் வேட்டை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் நேற்று இரவு கலால் பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திராவில் இருந்து வந்த பஸ்களில் சோதனை நடத்தினர்.
அப்போது திருப்பதியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பஸ்சில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 25) நாமக்கல்லை சேர்ந்த வினோத் (26) ஆகியோர் பையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்த து தெரியவந்தது. அவர்களிடம்11 ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்
இதேபோல திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பஸ்சில் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (60) என்பவரிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.