செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி. ஏராளமான பக்தர்கள் கலந்து
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
- பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அடுத்த, சப்தலிபுரம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைக்கப்பட்ட யாகசாலையில் 6 கால பூஜைகள் செய்து, யாகங்கள் வளர்க்கப்பட்டது.
மேலும் அங்கு வைக்குப்பட்டு இருந்த 208 கலசத்திற்க்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசத்தை தலைமீது ஏந்தி மேல தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மீது அமைந்துள்ள விமான கலச கோபுரத்தின் மீது ஊற்றினர். பின்னர் பக்தர்கள் புனித மீது தெளிக்கப்பட்டது.
இதன் பின்பு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, அலங்கரித்து தீபாராதனை நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.