சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றிய போது எடுத்த படம்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி. ஏரியூர் அருகே அருகே உள்ள தாமோதரன் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு யாரேனும் இறந் தால் அங்குள்ள சுடுகாட் டில் தகணம் செய்வது வழக்கம்.
இப்பகுதி, மக்களுக்கென தனியாக சுமார் 1 ஏக்கர் 20 சென்டில் சுடுகாடு அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் சுடுகாட்டை முழுவதும் ஆக்கிரமித்து அதனை உழுது பயிர் செய்துள்ளார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் கொடுத்தனர்.
அவரது உத்தரவின் பேரில் தனி வட்டாட்ச்சியர் முரளிதரன் (ஆதிதிராவிடர் நலத்துறை) முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் அபிலேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.