உள்ளூர் செய்திகள்

அரசியல் கட்சி, அமைப்புகள் சார்பில் எருது விடும் விழா நடத்த தடை

Published On 2023-03-29 09:45 GMT   |   Update On 2023-03-29 09:45 GMT
  • அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
  • கலெக்டர் அறிக்கை

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில், எருதுவிடும் விழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவித்துள்ள கட்டுபாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி அளிக்கபட்ட கிராமங்களில் மட்டுமே எருதுவிடும் விழாக்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒரு சில கிராமங்களில் கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் மாடு விடும் விழா நடத்தப்படும் என சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தெரியவருகின்றது.

இது நெறிமுறைகளை மீறிய செயலாகும். கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு எருதுவிடும் விழா நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விழாவினை தடைசெய்வதுடன், இனி வருங்காலங்களில் அந்த கிராமத்தின் பெயரை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப இயலாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து எருதுவிடும் விழாவினை விழாக்குழுவினர்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News