பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேலூர் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திய காட்சி.
புத்தாண்டில் மது குடித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்
- ரூ.50 ஆயிரம் வசூல்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடக்கூடாது. மது விருந்து கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை போதையில் ஓட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
புத்தாண்டையொட்டி நேற்று இரவு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 58 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
பள்ளிகொண்டா சுங்கசாவடியில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்ததாக 50 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். ரூ.50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.