உள்ளூர் செய்திகள்
பகுதி நேர ரேசன் கடையை நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
நந்தகுமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
- நந்தகுமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி தெற்கு ஒன்றியம் காட்டுப்புத்தூர் ஊராட்சி பாப்பாந்தோப்பு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடந்தது.
வேலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.
அவருடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு பாபு, துணை சேர்மன் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கோபி, பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், பேரூராட்சி செயலாளர் குமார், நிர்வாகிகள் அருள்நாதன், ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.