உள்ளூர் செய்திகள்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்த காட்சி.

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

Published On 2023-04-02 14:36 IST   |   Update On 2023-04-02 14:36:00 IST
  • சிறப்பு பூஜைகள் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.

இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. மார்க்கபந்தீஸ்வரர் திருத்தேரில் ஏற்றி பக்தர்கள் அரோகரா கோஷங்களுடன் வடம்பிடித்து மாட வீதியில் சுவாமி வலம் வந்தது.இரவு 8 மணி வரை தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேரோட்டத்தை ரத்தினகிரி பாலமுரு கனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News