உள்ளூர் செய்திகள்

மான்கள் இறைச்சியை விற்க முயன்றவர் கைது

Published On 2022-09-26 10:05 GMT   |   Update On 2022-09-26 10:05 GMT
  • பைக், மானின் தோல்கள் பறிமுதல்
  • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 38) என்பவர் ராமாலை சுரைக்காய் பள்ளம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து கடலை பயிரிட்டு வந்துள்ளார்.

அப்பகுதியில் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுந்தரம் வயரால் நிலத்தில் பல இடங்களில் கன்னிகள் அமைத்து வைத்திருந்து உள்ளார்.

நேற்று இரவு அந்த நிலத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் புள்ளிமான் ஜோடி ஒன்று அந்த கன்னியில் சிக்கி உள்ளது.

காலையில் சென்ற சுந்தரம் அந்த கன்னியில் சிக்கி இருந்த 2 மான்களை கொன்று அதன் இறைச்சியை துண்டுகளாகி விற்பனை செய்ய இருந்த போது வனத்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

விரைந்து சென்ற குடியாத்தம் வனத்துறையினர் சுந்தரத்தை பிடித்து அவரிடம் இருந்து சுமார் 40 கிலோ மான் இறைச்சியும் 2 புள்ளி மான்களின் தோள்களும் இறைச்சி வெட்ட பயன்படுத்திய கத்திகள் எடைத்தராசு கம்பிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.

மேலும் வனத்துறையினர் சுந்தரம் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப் பகுதிகளில் தீவிர வனத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு மான்கறி விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags:    

Similar News