உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் மனு

Published On 2023-04-07 15:08 IST   |   Update On 2023-04-07 15:08:00 IST
  • எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு
  • நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன் (வயது 47). இவர் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராகவும், திமுக செய்தி தொடர்பாள ராகவும், தலைமை கழக பேச்சாளராகவும் உள்ளார்.

இவர் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதாக கூறி நேற்று குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.ராமு தலைமையில் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வனராஜ், துணை செயலாளர் செ.கு. வெங்கடேசன், ஒன்றிய குழு துணை தலைவர் அருண்முரளி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எம். பாஸ்கர் உள்பட அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக வந்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட குடியாத்தம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் புகார் குறித்து உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News