உள்ளூர் செய்திகள்

பேரணாம்பட்டு வனப்பகுதியில் கழிவுகளை கொட்டிய கர்நாடக மருந்து கடை உரிமையாளர் கைது

Published On 2023-09-30 09:12 GMT   |   Update On 2023-09-30 09:12 GMT
  • வனத்துறையினர் நடவடிக்கை
  • மருந்து சீட்டு மூலம் கண்டுபிடித்தனர்

வேலூர்:

பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக- ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காலாவ தியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து சமூக வலைத ளங்களில் வைரலானது.

தகவலறிந்த வேலுார் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ் குமார் தலைமையில் வனவர் இளையராஜா, வனகாப்பாளர்கள் அரவிந்தசாமி, சிவன் ஆகியோர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

மருத்துவ கழிவுகளில் இருந்த மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டு, அதில் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர், நைசாக பேசி அந்த நபரை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்துக்கு வரவழைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (வயது 48) என்றும் 5 நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து பத்த லப்பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து ராஜேந்திர பிரசாத்தை வனத்து றையினர் கைது செய்து செய்தனர்.

Tags:    

Similar News