உள்ளூர் செய்திகள்

3டி பிரிண்டிங் தொழில்நுட்ப பயிற்சி அறிமுகம்

Published On 2023-04-20 14:38 IST   |   Update On 2023-04-20 14:38:00 IST
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது
  • பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது

வேலூர்:

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் மற்றும் ஜெர் மனி நிறுவனமான இ.ஓ.எஸ். (3டி பிரிண்டிங்) அமைப்புடன் இணைந்து புதிதாக 3டி பிரிண்டிங் தொழில்நுட்ப பயிற்சியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் என்.ரமேஷ், துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன், முதல்வர் எம்.ஞான சேகரன், இ.ஓ.எஸ். ஜெர்மனி நிறுவனத்தின் இந்திய இயக்கு னர் பிரகாசம் ஆனந்த், மேலாளர் தனசேகரன், அடிட்டிவ் லோனிங் இயக்குனர் சாலமன் பாபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியானது மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதுடன் திறன்மேம்பாட்டை வளர்ப்பதற்கான தாகவும், சுயதொழில் செய்வதற்கான அடிப்படை பயிற்சி யாகவும் அமையும். இ.ஓ.எஸ். ஜெர்மனி நிறுவனமானது பாலிடெக்னிக் கல்லூரி அளவில் தமிழ்நாட்டில் முதன் முறை யாக ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் அதற் கான கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

3டி தொழில்நுட்பமானது இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூரில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News