உள்ளூர் செய்திகள்

வேலூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

வேலூரில் வருகிற 11-ந் தேதி மனித சங்கிலி போராட்டம்

Published On 2022-10-08 15:18 IST   |   Update On 2022-10-08 15:18:00 IST
  • காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

வேலூர்:

தமிழகம் முழுவதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.

மனித சங்கிலி

வேலூர் மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் டீக்காராமன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளங்கோ, சஜன் குமார், ம.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கோபி, பழனி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் கப்பல் மணி, கணேஷ் தங்கமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் வரை வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தனர்.

Tags:    

Similar News