உள்ளூர் செய்திகள்

வேலூர் முஸ்லீம் அரசு பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கிய போது எடுத்த படம்.

அரசு பள்ளிகளில் சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்

Published On 2023-06-12 07:56 GMT   |   Update On 2023-06-12 07:56 GMT
  • கலெக்டர் உத்தரவு
  • பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும் என அறிவுரை

வேலூர்:

வேலூர் முஸ்லிம் அரசு பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

அவர் பேசியதாவது:-

பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று புத்தாண்டாக கருதி மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு குறிக்கோளை வைத்து படிக்க வேண்டும். மாணவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை சரிவர கவனிக்காதது தான் தோல்விக்கு காரணம்.

மாணவர்கள் ஒவ்வொரு வரும் தினமும் இரண்டு நிமிடம் ஒதுக்கி மனசாட்சி படி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

100-க்கு 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது இல்லை நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

10 ஆண்டுகள் கழித்து நாம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்க ளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், பொது அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் தொடங்கியது. 4 லட்சத்து 44 ஆயிரம் பாட புத்தகங்கள், 99 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்கள் சிரமம் அடைந்து வந்ததாக புகார் வந்தது.

மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலே அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை பொது மேலாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் 10 நாட்களில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்து தரப்படும்.

வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News