வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகிறார்
- அதிகாரிகள் ஆலோசனை
- சாலை பராமரிப்பு பணிகள் தீவிரம்
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரின் கலைஞர் ப்ளாக் என்ற புதிய கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. அதன் திறப்பு விழா மற்றும் வேலூர் கலெக்டர் அலுவ லகத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 1-ந் தேதி வேலூர் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடப்பதால் கலெக்டர் அலுவலக வளாகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டி வருகின்றனர்.
1-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். இதற்காக அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை வளாகம் தூய்மை ப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
முத ல்அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட அளவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாநகர பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது. வேலூர் காட்பாடி பகுதியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வி.ஐ.டி. பல்க லைக்கழகம் முதல் கலெக்டர் அலுவலகம் அரசு சுற்றுலா மாளிகை வரை சாலை பராமரிப்பு நடந்து வருகிறது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.