சர்வர் பழுதால் பொங்கல் தொகுப்பு வழங்கும்பணி தாமதம்
- ரேசன் கடைகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர்
- பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு நாளைக்கு 200 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர்.
டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி நேரம் அடிப்படையில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
முதல் நாளான இன்று அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து ரேசன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி பழுதானது.
சர்வர் பிரச்சினை காரணமாக இந்த கருவிகள் அனைத்து ரேசன் கடைகளிலும் இயங்க வில்லை. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவி டப்பட்டது.
அதன்படி அனைத்து ரேசன் கடைகளிலும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.